உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கூலித்தொழிலாளி கொலை: ஏழு ஆண்டுகளுக்கு பின் மூவர் கைது

 கூலித்தொழிலாளி கொலை: ஏழு ஆண்டுகளுக்கு பின் மூவர் கைது

தேனி: தேனி மாவட்டம் போடி அருகே கூலித்தொழிலாளி ரமேஷ் 41, மாயமான வழக்கு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதில் தொடர்புடைய வழக்கறிஞர் செந்தில்குமார் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். போடி குப்பிநாயக்கன்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி ரமேஷ் 41. இவர் 2018 பிப்.,ல் மாயமானார். அவரது மனைவி மேகலா புகாரின்படி போடி நகர் போலீசார் விசாரித்தனர்.இந்நிலையில் 2018 ல் வீரபாண்டி அருகே தப்புக்குண்டு ரோட்டில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டது. அடையாளம் தெரியாத உடலை மீட்டு வீரபாண்டி போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்தனர்.இந்நிலையில் கூலித்தொழிலாளி மாயமான வழக்கில் போடியைச் சேர்ந்த பாண்டிக்கு தொடர்பு இருப்பதை போலீசார் உறுதி செய்து, அவரை விசாரித்தனர். இதில் சொத்துத் தகராறில் 5 பேருடன் இணைந்து ரமேஷை, கொலை செய்து தப்புக்குண்டு அருகே உள்ள கிணற்றில் வீசியதாக கூறினார். ரமேஷ் உடல் உறுப்புகளை மதுரை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்திலும், மண்டை ஓடை சென்னை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்திற்கும் அனுப்பி, உடல் ரமேஷ் உடையது தான் என உறுதி செய்தனர். வீரபாண்டி போலீசார் பதிவு செய்த அடையாளம் தெரியாத உடல் என்ற வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து ஜூலையில் எஸ்.பி., உத்தரவிட்டார். இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய இன்ஸ்பெக்டர் ஜவஹர் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இக்கொலையில் தொடர்புடைய கூடலுாரைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில்குமார், போடி பாண்டி 45, பழனிசெட்டிபட்டி ராமநாதன் 49, ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி