உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  போதிய துப்புரவு பணியாளர்கள் இன்றி தேனியில் சுகாதாரம் பாதிப்பு

 போதிய துப்புரவு பணியாளர்கள் இன்றி தேனியில் சுகாதாரம் பாதிப்பு

தேனி: தேனியில் போதிய சுகாதாரப்பணியாளர் இல்லாததால் நகரின் பல்வேறு இடங்களில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்டு 33 வார்டுகள் உள்ளன. தினமும் 30 டன்னுக்கும் அதிகமாக குப்பை சேகரமாகிறது. இதனை தனியார் நிறுவனம் மூலம் சுத்தம் செய்யும் பணி நடந்து வந்தது. அந்த நிறுவனம் சரிவர பணிகள் மேற்கொள்ளவில்லை என அந்நிறுவன ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் ஏலம் விடப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதுவரை ஏற்கனவே ஒப்பந்தம் செய்த நிறுவனம் துாய்மை பணிகள் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் டெண்டர் விடுதற்கான பணிகளில் நகராட்சி நிர்வாகம் ஆர்வம் காட்டவில்லை. போதிய பணியாளர்கள் இல்லாததால் அனைத்து வார்டுகளிலும் குப்பை தேங்கி உள்ளது. வாரம் ஒருமுறை மட்டும் சுத்தம் செய்யும் நிலை உருவாகி உள்ளது. இதனால் நகரின் பல முக்கிய பகுதிகளில் சுகாதார சீர் கேடு ஏற்பட்டுள்ளது. குப்பையை தெருநாய்கள் ரோட்டில் வாரி இறைப்பதும் தொடர்கிறது. அவ்வழியாக நகராட்சி அதிகாரிகள் சென்றுவந்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ