உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதி குறைவு; கலெக்டர் ஆய்வில் அதிர்ச்சி

அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதி குறைவு; கலெக்டர் ஆய்வில் அதிர்ச்சி

தேனி : தேனி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கலெக்டர் ஷஜீவனா திடீர் ஆய்வு செய்த போது, நோயாளிகளுக்கு உரிய வசதிகளை வசதிகள் இன்றியும், அலைக்கலைக்கப்படுவது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். வசதிகளை ஏற்படுத்தி தர மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தினார்.அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளை சரிவர கவனிப்பதில்லை, சில மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் மோசமாக உள்ளது என கலெக்டருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.அதன் அடிப்படையில் உத்தமபாளையம் அரசு மருத்துவமனை, தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில்திடீர் ஆய்வு மேற்கொண்டார்.மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உள் நோயாளிகள் உணவு பெற 3வது மாடியில் இருந்து 2வது மாடிக்கு வரவழைத்து அலைக்கழிக்கபடுவதும், வார்டுகளில் உள்ள கழிப்பறைகளில் கதவுகள் சேதமடைந்தது கண்டறிந்தார்.உத்தமபாளையத்தில் சிகிச்சைக்காக நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்பது தெரிந்தது.உடனடியாக மருத்துவப்பணிகள் இணை இயக்குனர், மருத்துவக்கல்லுாரி முதல்வர் ஆகியோரிடம் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டும், நோயாளிகளை அலைக்கழிக்க கூடாது.அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அதிகாரிகளை என அறிவுறுத்தினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை