உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  வழக்கறிஞர் கார் சேதம் இருவர் மீது வழக்கு

 வழக்கறிஞர் கார் சேதம் இருவர் மீது வழக்கு

தேனி: தேனி பாரஸ்ட் ரோடு வழக்கறிஞர் கணேசன் 49. இவர் தேனி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கில் கண்டமனுார் மேலப்பட்டிவேல்முருகனுக்கு நீதிமன்றம் கடந்த நவ.27ல் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பளித்தது. ஆனால் வேல்முருகன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. நீதிமன்ற தீர்ப்பால் ஆத்திரம் அடைந்த வேல்முருகன்,அவரது நண்பர் அசோக்குமார் ஆகியோர் வழக்கறிஞர் கணேசனின் கார் முன் டயர்களை சேதப்படுத்தினர். அதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். பின் வழக்கறிஞரின் சட்ட அலுவலக பூட்டை உடைத்து வழக்கு ஆவணங்களை திருடிச் சென்றனர். பின் வழக்கறிஞருக்கு அலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்தார். வழக்கறிஞர் புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி