உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பள்ளி அருகே மதுவிற்ற பெட்டிக்கடைக்கு சீல்

பள்ளி அருகே மதுவிற்ற பெட்டிக்கடைக்கு சீல்

தேனி: மாவட்டத்தில் பள்ளி கல்லுாரி அருகே புகையிலை, மது விற்பனையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பெட்டிக்கடைகள், உணவகங்கள், மாலைநேர சிக்கன்,மீன் பொறியல் கடைகளில் மதுவிற்க கூடாது. அவ்வாறு விற்பனை செய்தால் கடைகளுக்கு 6 மாதங்கள் வரை மூடி 'சீல்' வைக்க அரசு புதிய சட்டம் இயற்றி உள்ளது. இச்சட்டத்தின் படி விதிமீறும் கடைகளுக்கு 'சீல்' வைக்க வருவாய்த்துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.இதன்படி கோம்பை துரைராஜபுரத்தில் அரசு கள்ளர் பள்ளி அருகே செல்வி என்பவரது பெட்டிக்கடையில் சில்லரையில் மது விற்பனை செய்வதாக புகார் வந்தது. கலெக்டர் உத்தரவில், கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கடையில் ஆய்வு செய்த போது மது விற்பனை செய்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து மாநில அரசு இயற்றிய புதிய சட்டத்தின் படி பெட்டிக்கடைக்கு 'சீல்' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை