இலக்கியமன்ற போட்டிகள்
தேனி: அரசுப்பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான இலக்கியமன்ற போட்டிகள் நடத்தப்படுகிறது. மாவட்ட அளவிலான போட்டிகள் தேனி பி.சி., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கட்டுரை, பேச்சு, கவிதை எழுதுதல், கதை சொல்லுதல் போட்டிகள் தமிழ், ஆங்கில மொழிகளில் நடத்தப்பட்டது. உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் தலைமை வகித்தார். போட்டிகளை பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர் வெங்கடேசன் ஒருங்கிணைத்தார்.