உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கட்டுப்பாட்டை இழந்து போர்டில் மோதிய கார்: ஐயப்ப பக்தர் பலி

கட்டுப்பாட்டை இழந்து போர்டில் மோதிய கார்: ஐயப்ப பக்தர் பலி

தேவதானப்பட்டி:சென்னையிலிருந்து சபரிமலைக்கு சென்று விட்டு ஊர் திரும்பும் போது தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், நெடுஞ்சாலை போர்டில் மோதியதில் காரை ஓட்டி வந்த ஆர். கார்த்திகேயன் 43, பலியானார். குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் சுகம் பார்க் சொசைட்டியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் 48. இவரது மகன் தக் ஷீல் 13. சென்னை ஆவடி கண்ணாபாளையத்தைச் சேர்ந்த இவரது நண்பர் ஆர்.கார்த்திகேயன் 43. இவரது மகன் ஸ்ரீஹரிஹரன் 10. ஆவடியைச் சேர்ந்த பி.கார்த்திகேயன் 43. இவர்கள் சென்னையிலிருந்து காரில் சபரிமலை சென்றனர். அங்கு தரிசனம் முடிந்து ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். காரை ஆர்.கார்த்திகேயன் ஓட்டினார். பெரியகுளம் வத்தலக்குண்டு - தேவதானப்பட்டி ரோட்டில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டின் வலதுபுறம் இருந்த நெடுஞ்சாலை போர்டில் மோதியது. இதில் அனைவரும் காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தலையில் பலத்த காயத்துடன் அனுமதிக்கப்பட்ட ஆர்.கார்த்திகேயன் இறந்தார். காயமடைந்த மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ