உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ரோட்டில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

 ரோட்டில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

மூணாறு: கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அடிமாலி சீயப்பாறை அருகே ஆறாம் மைல் பகுதியில் லாரி ரோட்டில் கவிழ்ந்து நான்கு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேரளா, எர்ணாகுளம் மாவட்டம் பெரம்பாவூரில் இருந்து பிளைவுட்களை ஏற்றிய லாரி மூணாறு அருகில் உள்ள அடிமாலியை நோக்கி வந்து கொண்டிருந்தது. கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அடிமாலி சீயப்பாறை அருகே ஆறாம் மைல் பகுதியில் நேற்று அதிகாலை வந்த போது லாரி திடிரென நிலை தவறி ரோட்டில் கவிழ்ந்தது. அதனால் வாகனங்கள் கடந்து செல்ல இயலவில்லை. நான்கு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரியை அகற்றிய பிறகு காலை 8:30 மணிக்கு போக்குவரத்து சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்