உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மக்காச்சோளம் கிலோ ரூ. 24.76க்கு விற்பனை

மக்காச்சோளம் கிலோ ரூ. 24.76க்கு விற்பனை

தேனி: தேனி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளம் கிலோ ரூ. 24.76க்கும், கம்பு கிலோ ரூ. 26க்கும் ஏலம் சென்றது. வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் வேளாண் விளை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர விளை பொருட்களில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க இடம் அளிக்கின்றனர். விவசாயிகள் வழங்கும் விளை பொருட்களுக்கு பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது. விலை பொருட்கள் இ-நாம் திட்டத்தில் ஆன்லைன் மூலம் மறைமுக ஏலம் விடப்படுகிறது. நேற்று இம்முறையில் மக்காச்சோளம் 5.5 டன், கம்பு 595 கிலோ விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஏலத்தில் 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். மக்காச்சோளம் கிலோ ரூ. 24.76க்கும், கம்பு கிலோ ரூ. 26க்கும் விற்பனையானது. விளை பொருட்களை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள், இநாம் ஏலத்தில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் தேனி பெரியகுளம் ரோட்டில் சுக்குவாடன்பட்டியில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை நேரில் அணுகலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை