உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / செம்பு பாத்திரத்தை இரிடியம் எனக்கூறி ரூ.9.50 லட்சம் மோசடி: ஒருவர் கைது

செம்பு பாத்திரத்தை இரிடியம் எனக்கூறி ரூ.9.50 லட்சம் மோசடி: ஒருவர் கைது

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் செம்பு பாத்திரத்தை இரிடியம் எனக்கூறி வியாபாரி ஜஸ்டின் ஜெயக்குமாரிடம் 56, ரூ.9.50 லட்சம் மோசடி செய்த வழக்கில் தேனியைச் சேர்ந்த ராஜ்குமாரை 41, க.விலக்கு போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடுகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்தவர் ஜஸ்டின் ஜெயக்குமார். தொழிலில் நஷ்டமடைந்த இவரிடம் தேனி ராஜ்குமார் அணுகி இரிடியம் விற்றால் லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார். இதற்கிடையில் தேனி ராஜேஷ் ஜஸ்டின் ஜெயக்குமாரை போனில் தொடர்பு கொண்டு இரிடியம் இருந்தால் ரூ.5 கோடி வரை தருவதாக தெரிவித்தார். இந்த விபரத்தை ராஜ்குமாரிடம், ஜஸ்டின் ஜெயக்குமார் கூறினார். மேலும் இரிடியம் வாங்க ரூ.10 லட்சம் தேவைப்படும் எனவும் ராஜ்குமார் தெரிவித்தார். அதை நம்பி ஜஸ்டின் ஜெயக்குமார் ரூ.9.5 லட்சத்தை அவரிடம் கொடுத்தார்.க.விலக்கு அருகே உள்ள லாட்ஜில் வைத்து இரிடியம் வாங்க முடிவானது. இரிடியத்தை கூடுதல் விலைக்கு வாங்க ராஜேஷ் தயாராகவுள்ளதாக ஜஸ்டின் ஜெயக்குமார் தெரிவித்தார். ஜஸ்டின் ஜெயக்குமாரிடம் ரூ.9.5 லட்சத்தைப் பெற்றுக் கொண்ட ராஜ்குமார் பழைய செம்பு பாத்திரத்தை இரிடியம் என கொடுத்தார். அங்கு வந்த ராஜேஷூம் இது இரிடியம் தான் என்றார்.அதனை மதுரைக்கு கொண்டு வரவும், அங்கு பேசிக் கொள்ளலாம் என ராஜேஷ் தெரிவித்து சென்றார். அதன் பிறகு ராஜ்குமார், ராஜேஷ் ஆகியோரை தொடர்பு கொள்ள முடியவில்லை.இருவரும் கூட்டுசேர்ந்து இரிடியம் எனக்கூறி ரூ.9.5 லட்சம் மோசடி செய்ததாக ஜஸ்டின் ஜெயக்குமார் க.விலக்கு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணகுமார், எஸ்.ஐ., சவரியம்மாள்தேவி மற்றும் போலீசார் விசாரித்து ராஜ்குமாரை நேற்று கைது செய்தனர். தலைமறைவான ராஜேைஷ தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை