உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கஞ்சா வைத்திருந்தவர் கைது

கஞ்சா வைத்திருந்தவர் கைது

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி போலீசார் ஆண்டிபட்டி - ஏத்தக்கோவில் ரோட்டில் மணியாரம்பட்டி விலக்கில் வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக சென்ற இரு சக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படி சென்ற நபரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் 60 கிராம் கஞ்சா மற்றும் புகையிலை பாக்கெட்டுகள் இருந்துள்ளது. விசாரணையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மணியாரம்பட்டியை சேர்ந்த மகேந்திரன் 37, என்பதும் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இருசக்கர வாகனம் மற்றும் கஞ்சா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் மகேந்திரனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை