உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நடைபயற்சி  சென்று திரும்பியவர் உயிரிழப்பு

நடைபயற்சி  சென்று திரும்பியவர் உயிரிழப்பு

தேனி; தேனி ஈஸ்வரன் நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார் 39. இவர் தேனி உணவுப் பாதுகாப்புத் துறையில் டிரைவராக பணிபுரிந்தார்.சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர், நேற்று காலை நடைபயிற்சி முடித்து வீடு திரும்பியவர் சேரில்அமர்ந்து காய்கறி நறுக்கி கொண்டிருந்தார். அப்போது இடது கை தோள்பட்டை வலிப்பதாகக் கூறியவாறு சேரில் இருந்து சரிந்து கீழே விழுந்துள்ளார். மனைவி சூரியகலா, கணவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு தேனி அரசு மருத்துவக்கல்லுாரிக்கு பரிந்துரைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தினேஷ்குமார் இறந்துவிட்டதாகதெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை