மேலும் செய்திகள்
சிறுமியை தொந்தரவு செய்தமளிகை கடைக்காரருக்கு சிறை
25-Jul-2025
தேனி; வருஷநாட்டில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 44 வயது ஆடுமேய்க்கும் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை,ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வருஷநாடு பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி. அங்குள்ள நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். 2022 ஏப்.4ல் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவர் வீட்டின் பின்புறம் இயற்கை உபாதைகளை கழிக்கச் சென்றார். அப்போது ஆடு மேய்க்கும் நபர் மொக்கைச்சாமி 44, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தார். சிறுமியின் தாத்தா புகாரில் கடமலைக்குண்டு போலீசார் மொக்கைச்சாமியை போக்சோவில் கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. மொக்கசாமிக்கு ஐந்து ஆண்டுகள் சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம், விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார். தமிழக அரசு சிறுமியின் புனர்வாழ்விற்காக ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25-Jul-2025