உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மனைவியை தவறாக பேசியவரை தட்டிக் கேட்டவருக்கு கத்தி குத்து

 மனைவியை தவறாக பேசியவரை தட்டிக் கேட்டவருக்கு கத்தி குத்து

கம்பம்: கம்பம் புதுப்பட்டி பேச்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் விக்ரமன் 25, இவரது மனைவியை இதே ஊரில் இந்திரா காலனியில் வசிக்கும் ஞானசேகர் மகன் அசோக் 20, என்பவர் தவறாக பேசியுள்ளார். இது குறித்து விக்ரமன் உத்தமபாளையம் போலீசில் அசோக் மீது புகார் செய்தார். போலீசார் இருவரையும் விசாரித்து எச்சரிக்கை செய்து எழுதி வாங்கி அனுப்பினர். இதனால் ஆத்திரமடைத்த அசோக் நேற்று முன்தினம் காலனியில் உள்ள மைக்செட் கடை முன் நின்று கொண்டிருந்த விக்ரமனை, போலீசில் புகார் செய்ததை சொல்லி தான் வைத்திருந்த கத்தியால் விக்ரமனின் மார்பில் குத்தியுள்ளார். அருகில் இருந்தவர்கள் விலக்கி விட்டுள்ளனர். உத்தமபாளையம் போலீசில் விக்ரமன் புகாரில் அசோக்கை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை