உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மயிலாடும்பாறையில் பள்ளிக்கு சென்ற 2 மாணவர்கள் மாயம்

மயிலாடும்பாறையில் பள்ளிக்கு சென்ற 2 மாணவர்கள் மாயம்

கடமலைக்குண்டு: மயிலாடும்பாறையில் பள்ளிக்கு சென்ற 2 மாணவர்கள் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.மயிலாடும்பாறை அருகே செங்குளம் கார்த்திக் மகன் பரத் 13. தனியார் பள்ளி 8ம் வகுப்பு மாணவர். இதே ஊரைச் சேர்ந்த பால்பாண்டி மகன் சிவனேஸ்வரன் 14. அரசு மேல்நிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவர். நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து பள்ளிக்குச் சென்றனர். ஆனால் இரவு வரை வீட்டிற்கு திரும்பவில்லை. அச்சமடைந்த பெற்றோர் மயிலாடும்பாறையில் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின் மயிலாடும்பாறை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் நேற்று பரத், சிவனேஸ்வரன் ஆகியோர் படித்த பள்ளிகளுக்கு சென்று உடன் படிக்கும் சக மாணவர்களிடம் விசாரணை செய்தனர். காணாமல் போன அன்று காலை 9:00 மணி அளவில் இருவரும் கலர் சட்டை அணிந்த நிலையில் பார்த்துள்ளதாக அப்பகுதியில் இருந்தவர்கள் தெரிவித்தனர். போலீசார் விசாரணையில் பெற்றோர், இருவரும் வீட்டில் இருந்து புறப்படும் போது சீருடையில் இருந்ததாக தெரிவித்துள்ளனர். இருவரும் வெளியூருக்கு சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ