உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நாளை மருத்துவ முகாம்

நாளை மருத்துவ முகாம்

தேனி: கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை(நவ.,8) நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடக்கிறது. இதில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறு, பெண்கள் நலன், குழந்தைகள் நலன், இருதயம், மூளை நோய், தோல்சிகிச்சை, கண் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வகையான நோய் சிகிச்கைள், பல்வேறு வகையான பரிசோதனைகள், சேவைகள் வழங்கப்பட உள்ளது. தேனி தாலுகாவை சேர்ந்த தொழிலாளர் நல அலுவலகத்தில் நலவாரியங்களில் பதிவு செய்தவர்கள், பொதுமக்கள் முகாமில் பங்கேற்று பயனடையலாம். நலவாரிய அடையாள அட்டை நகல், ஆதார் நகலுடன் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட தொழிலாளர் நல சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையர் ராமராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை