ரோட்டில் கவிழ்ந்த மினி லாரி
மூணாறு : மூணாறு அருகில் உள்ள இடமலைகுடி ஊராட்சியில் ரோடு வசதி சரிவர இல்லாததால், ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதனால் பல பகுதிகளில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. அப்பகுதி முழுதும் மழையால் சேறும், சகதியுமாக உள்ளதால் அதிக உந்து சக்தி கொண்ட ஜீப்புகள் கடும் சிரமத்துடன் சென்று வருகின்றன. இந்நிலையில் ராஜமலை பெட்டிமுடியில் உள்ள கோடவுனில் இருந்து சொசைட்டிகுடிக்கு மினி லாரியில் ரேஷன் அரிசி கொண்டு செல்லப்பட்டது. பெட்டிமுடியைச் சேர்ந்த சாமி லாரியை ஓட்டினார். சொசைட்டி குடி அருகே சென்றபோது லாரி நிலை தவறி ரோட்டில் கவிழ்ந்தது. டிரைவர் காயம் இன்றி உயிர் தப்பினார்.