மேலும் செய்திகள்
மின்கம்பம் சாய்ந்தது; பொதுமக்கள் 'ஷாக்'
02-Oct-2025
கம்பம், : கம்பத்தில் நேற்று எம்.கே.எம்., 'ஸ்போர்ட்ஸ் வில்லேஜ்' திறப்பு விழா நடந்தது. கம்பம் ஆங்கூர் பாளையம் ரோட்டில் ஜோலிஸ் டொமைன் பிளாட்டில் 5 ஏக்கர் பரப்பில் எம்.கே.எம்., ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் அமைக்கப்பட்டது. இங்கு அதி நவீன வசதிகளுடன் குளிரூட்டப்பட்ட இறகு பந்து மைதானம் உள்ளது. உலக தரத்தில் ஏழு லேயர் (முழங்கால் தேய்மானத்தை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட மைதானம்) வசதிகள் கொண்ட அதி நவீன மைதானமாகும். அத்துடன் 200 மீட்டர் ஸ்கேட்டிங் வளைவு மைதானம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெயபாண்டியன் தலைமை வகித்தார். ஸ்போர்ட் மையத்தின் உரிமையாளர் செந்துார்பாண்டி முன்னிலை வகித்தார். இறகு பந்து மைதானத்தில் முதல் நிகழ்ச்சியாக கம்பம் கிரீன்வேலி ரோட்டரி கிளப் சார்பில் மகளிர் இரட்டையர் இறகு பந்து போட்டிகள் நடந்தன. போட்டிகளை டாக்டர் ரஷீதா பானு, தி.மு.க., விளையாட்டு பிரிவத் தலைவர் வசந்தன் ஆகியோர் துவக்கி வைத்தனர். ரோட்டரி கிளப் நாராயணகுமார், டாக்டர் சூரியகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
02-Oct-2025