மேலும் செய்திகள்
7 பேரிடம் ரூ.12.55 லட்சம் 'அபேஸ்'
01-Sep-2024
தேவாரம் : போடி திருமலாபுரம் பஜார் தெருவை சேர்ந்தவர் அருள் செல்வி 54. இவர் அருள் கிராம முன்னேற்ற தொண்டு நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இதில் கடன் தருவதாகவும், உறுப்பினராக சேர ரூ.10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை நிர்ணயம் செய்து அதற்கான ரசீதும் தயார் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் தேவாரம் அருகே அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஆனந்தகுமார் 44. என்பவருக்கு கடன் ரூ. 5 லட்சம் தருவதாக கூறி உறுப்பினராவதற்கு ரூ 30 ஆயிரம் அருள் செல்வி வாங்கி உள்ளார். வாங்கிய பணத்திற்கு ரசீதும் கொடுத்துள்ளார். குறிப்பிட்ட நாளில் கடன் தொகை தராமல் நம்பிக்கை மோசடி செய்துள்ளார். இது போல பலரிடம் ரூ.2 லட்சத்திற்கு மேல் வாங்கியதாக புகார் கூறுகின்றனர். ஆனந்தகுமார் புகாரில் தேவாரம் போலீசார் பண மோசடி செய்த அருள் செல்வியை கைது செய்து விசாரிக்கின்றனர்.
01-Sep-2024