உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முத்து மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

முத்து மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ஆண்டிபட்டி; சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் சித்திரை திருவிழா மே 6 ல் துவங்கி 10ல் முடிகிறது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று கொடியேற்று விழா நடந்தது. அம்மன் படம் வரையப்பட்ட கொடிக்கு பூஜைகள் செய்தனர். பக்தர்கள் கோஷத்துடன் கொடி மரத்திற்கு பூஜைகள் செய்து கொடியேற்றப்பட்டது. கொடியேற்றத்திற்குப் பின் விழா நாள் வரை தினமும் இரவு 7:00 மணிக்கு அம்மன் கோயில் வளாகத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி