மேலும் செய்திகள்
தமிழகம் முழுதும் அரசு டாக்டர்கள்... போராட்டம்
14-Nov-2024
தேனி: தேனி லேக் ரோட்டில் இயங்கிவரும் நலம் பல்நோக்கு மருத்துவமனையில் முதுகுவலி, குதிங்கால் வலி, சர்க்கரை நோய் நரம்பு பாதிப்பினால் உண்டாகும் கால் பாதிப்புகளை குணப்படுத்தும் விதத்தில் '3டி' முப்பரிமாணத்தில் கால் பாத அளவுகளை துல்லியமாக கண்றிந்து காலணிகளை வழங்கும் 'பாதம் புட்வேர்'விற்பனை மைய திறப்பு விழா நடந்தது.ஏ.சி.வி., நிறுவன நிர்வாக இயக்குனர் சந்திரசேகரன் திறந்து வைத்தார். நலம் பல்நோக்கு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சி.பி.ராஜ்குமார், பாலசங்கா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் கதிரேசன், மருத்துவஆலோசகர் மயக்கவியல் துறை நிபுணர் டாக்டர்.பிரபாகரன், நிர்வாக அலுவலர் வனிதா, தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை பெண்கள் மெட்ரிக் பள்ளிச் செயலாளர் லட்சுமணன்,உறவின்முறை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின் பாலசங்கா குழும நிர்வாக இயக்குனர் இன்சூரன்ஸ் வளாகத்தை திறந்து வைத்தார்.'இம்மையத்தில் கால் பாத அழுத்தத்தை உணரும் கருவி, கால் வடிவமைப்பை அறியும் 3டி ஸ்கேனர் மூலம் அளவுகள் எடுத்து, காலணிகளை வழங்கப்படும். இதனால் எதிர்காலத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது', என டாக்டர் ராஜ்குமார் தெரிவித்தார். நிகழ்வில் மருத்துவமனை டாக்டர்கள், நர்ஸ்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மருத்துவ அலுவலர் டாக்டர் பாசித் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.
14-Nov-2024