உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேசிய பெண் குழந்தைகள் தின விழா

தேசிய பெண் குழந்தைகள் தின விழா

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி சக்கம்பட்டி இந்து மேல்நிலைப் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா நடந்தது. ஆண்டிபட்டி ஆரோக்ய அகம், மாவட்ட சமூக நலத்துறை, தேன் சுடர் பெண்கள் இயக்கம் சார்பில் நடந்த விழாவில் மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா தலைமை வகித்தார். மாணவி நித்யா வரவேற்றார். இந்து மேல்நிலைப் பள்ளிச் செயலாளர் ரவீந்திரன் கருத்துரை வழங்கினார். குழந்தை திருமணம் நடப்பதற்கு காரணம், 'பெற்றோர்களே, குழந்தைகளே' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. ஆரோக்ய அகம் துணை இயக்குனர் முருகேசன், ஆலோசகர் சதீஷ் சாமுவேல், தேன் சுடர் பெண்கள் இயக்க செயலாளர் பெருமாள்தாய், பொருளாளர் பாண்டீஸ்வரி உட்பட பலர் பேசினர். மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாணவி சாதனா நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை