அங்கன்வாடிகளில் திருக்குறள் ஒப்புவித்தலை ஊக்கப்படுத்த புதிய முயற்சி குழந்தைகள் பள்ளி செல்லும் போது 10 குறள்கள் கூற பயிற்சி
தேனி:க்கும் வகையில் பயிற்சி வழங்கி வருவதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கன்வாடிகளில் 2 முதல் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். அவர்களுக்கு தினமும் அவித்த பயறு வகைகள், முட்டை இதில் ஏதாவது ஒன்று, சத்துணவாக வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியாக பாடல்கள், விளையாட்டு, கதை உள்ளிட்டவை கற்பிக்கப்படுகின்றன. முதலில் அங்கன்வாடி மையங்களுக்கு அழுது வராமல் அடம் பிடிக்கும் குழந்தைகள் சக குழந்தைகளுடன் பழகி நண்பர்களாகி விளையாடுகின்றனர். அங்கன்வாடி பணியாளர்களின் கவனிப்பால் குழந்தைகள் ஆவர்த்துடன் மையத்திற்கு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் 1065 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் சுமார் 20,290 குழந்தைகள் படிக்கின்றனர். இவர்களுக்கு முன்பருவ கல்வியில் தமிழ் உயிர் எழுத்துக்கள், ஆங்கில எழுத்துக்கள், எண்கள் இவற்றுடன் ஆத்திச்சூடி, குழந்தை பாடல்கள் உள்ளிட்டவை தினமும் கற்றுத்தருகின்றனர். மாவட்டத்தில் இந்தாண்டு முதல் மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் பயிற்சி அளிக்க திட்டமிட்டு சில மாதங்களாக பயிற்சி அளித்து வருகின்றனர். தினமும் குழந்தைகள் 2 அல்லது 3 திருக்குறளை அமைப்பாளர்கள் கூறி அதனை திரும்ப கூறுமாறு பயிற்சி அளிக்கின்றனர். தினமும் திறக்குறள் பயிற்சி இப் புது முயற்சி பற்றி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: 2முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அதிக கற்றல் திறன் உள்ளது. இந்த வயதில் அவர்கள் என்ன கற்றுக்கொள்கின்றனரோ அது வயதாகும் வரை நினைவில் நிற்கும். இதனால் அங்கன்வாடியில் திருக்குறள் ஒப்புவித்தல் பயிற்சியை கற்றுத்தருகிறோம். குழந்தைகள் அங்கன்வாடியில் இருந்து முதல் வகுப்பிற்காக பள்ளிக்கு செல்லும் போது குறைந்த பட்சம் 10 திருக்குறள்களாவது ஒப்புவிக்கும் வகையில் தினமும் பயிற்சி வழங்கி வருகிறோம். சில அங்கன்வாடி மையங்களில் சில குழந்தைகள் தற்போதே 5 திருக்குறள் ஒப்புவிக்கின்றனர். 50 சதவீத குழந்தைகள் ஒரு திருக்குறளாவது கூறும் வகையில் பயிற்சி வழங்கி உள்ளோம். அவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பாடல் மூலம் குழந்தைகளுக்கு திருக்குறள் பயிற்சி வழங்குகிறோம் என்றார்.