உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உணவு தயாரிப்பில் சுகாதாரம் பின்பற்றாத பள்ளிகளுக்கு நோட்டீஸ்

உணவு தயாரிப்பில் சுகாதாரம் பின்பற்றாத பள்ளிகளுக்கு நோட்டீஸ்

தேனி : அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம், மதிய உணவுத்திட்டம், உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சில தனியார் பள்ளிகளிலும் மதிய உணவுகள் வழங்கப்படுகிறது.உணவுப்பாதுகாப்புத்துறையினர் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம் பற்றி கலெக்டர் உத்தரவில் உணவுப்பாதுகாப்புத்துறையினர் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.கடந்தவாரம் தனியார் பள்ளிகளில் சோதனை செய்தனர். இதில் உணவு தயாரிப்பில் சுகாதரம் பின்பற்றாத இரு பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி உள்ளனர். உணவுப்பாதுகாப்புத்துறையினர் கூறுகையில், பள்ளிகளில் வழங்கப்படும் உணவுகள் குறித்து ஆய்வுகள் செய்கிறோம். உணவு தயாரிப்பு இடத்தில் சுகாதாரம் கடைபிடிக்காத பள்ளிகள், கோயில் நிர்வாகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி வருகிறோம். என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை