டூவீலர் மீது பஸ் மோதி ஒருவர் பலி
போடி : போடி அருகே சூலப்புரத்தை சேர்ந்தவர் குணசேகரன் 40. இவர் சிலமலையை சேர்ந்த முருகன் 45, என்பவரை மூன்று நாட்களுக்கு முன்பு டூவீலர் ஏற்றி கொண்டு மெயின் ரோட்டில் சென்றுள்ளார். எதிரே வேகமாக வந்த தனியார் பஸ் டூவீலர் மீது மோதியது. இருவரும் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலன் இன்றி குணசேகரன் நேற்று பலியானார். போடி தாலுகா போலீசார் கோம்பை கரியணம்பட்டியை சேர்ந்த பஸ் டிரைவர் பாலகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.