உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலர்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி

டூவீலர்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி

பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை தூய்மை பணியாளர் காலனியைச் சேர்ந்த விஜயா மகன் பிரபாகரன் 29. தீபாவளியன்று டூவீலரில் உறவினர் முத்துவை பின்னால் ஏற்றிக்கொண்டு பெரியகுளம் வடுகபட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த டூவீலர் மோதியது. இதில் காயமடைந்த பிரபாகரன் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார். விபத்து ஏற்படுத்திய இந்திராபுரித்தெருவைச் சேர்ந்த சுதர்சனிடம் 20. தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ