உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நிலம் வாங்க வந்தவரிடம் வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

நிலம் வாங்க வந்தவரிடம் வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

மூணாறு; நிலம் வாங்குதற்கு முன்பணத்துடன் வருமாறு கூறி ரூ.8 லட்சத்தை பறித்துச் சென்ற வழக்கில் இடைதரகரில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.கேரளா, கொல்லம் சக்திகுளங்கரையைச் சேர்ந்த மனு பாகுலேயன், மறையூரில் நிலம் வாங்க எண்ணி மூணாறு அருகே ஆனச்சால் பகுதியில் வசிக்கும் இடைதரகர்கள் ஷிகாபுதீன் 41, அவரது நண்பர் ஷிபு 46 ஆகியோரை அணுகினார். அவர்கள் இருவரும் மனுபாகுலேயனிடம் இருந்து பணத்தை அபகரிக்க திட்டமிட்டனர்.அதற்கு மறையூரில் நிலம் இருப்பதாக கூறி முன்பணத்துடன் வருமாறு கூறினர். அதனை உண்மை என எண்ணியவர் ரூ.8 லட்சத்துடன் டிச.29ல் உறவினருடன் மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட் பகுதிக்கு வந்தார். அங்கு வைத்து ஷிகாபுதீன், ஷிபு ஆகியோர் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். மூணாறு போலீசில் மனுபாகுலேயன் புகார் அளித்தார். மறையூரில் தலைமறைவாக இருந்த ஷிகாபுதீனை இரு தினங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்த நிலையில் ஷிபுவை நேற்று முன்தினம் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை