தினம் ஒரு திருக்குறள் கடைகளுக்கு அறிவுறுத்தல்
தேனி : மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் தினமும் ஒரு திருக்குறள் விளக்கத்துடன் காட்சிப்படுத்த வேண்டும். இதனை அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் படித்து பயன்பெறும் வகையில் வைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. கடைகள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள், அமைப்புகள் பின்பற்றிட அறிவுறுத்துவதாக தேனி தொழிலாளர் நலத்துறை அமலாக்கப்பிரிவின் உதவி ஆணையர் மனுஜ் ஷ்யாம் சங்கர் தெரிவித்துள்ளார்.