செப்.4ல் உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு முகாம்
தேனி: கலெக்டர் அலுவலகத்தில் செப்.4 காலை 10:00 மணி முதல் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. உடல் உறுப்பு தானம் என்றால் என்ன, அதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது. உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவோர் இம்முகாமில் பங்கேற்று பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன் தலைமையில் அதிகாரிகள் செய்து வருகின்றனர். ஆதார் அட்டையுடன் பங்கேற்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.