உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போடியில் இயற்கை விவசாய திட்டம் அறிமுகம்

போடியில் இயற்கை விவசாய திட்டம் அறிமுகம்

தேனி: போடி வட்டாரத்தில் இந்தாண்டு மத்திய அரசின் இயற்கை விவசாய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்தனர்.வேளாண் அதிகாரிகள் கூறுகையில், 'மத்திய அரசின் சார்பில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு வட்டாரத்தை தேர்வு செய்துள்ளனர். அங்கு சுமார் 125 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விவசாயிகள் போடி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் தேர்வாகும் விவசாயிகள் தோட்டத்தில் இயற்கை உரம், பூச்சி விரட்டி மருந்துகள் தயாரித்தல் உள்ளிட்டவை தயாரிக்க பயிற்சி வழங்கப்படும். மானிய தொகையாக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வரை வழங்கப்பட உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை