மேலும் செய்திகள்
பனை விதை நடவு பணி
28-Sep-2024
கம்பம் : பனை விதைகள் நடவு செய்யும் பணியில் ஊராட்சி நிர்வாகங்களும் இறங்க வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது.பனை விதைகள் நடவு செய்யும் திட்டம் தற்போது அரசால் துவக்கப்படுள்ளது. தமிழக அரசின் மாநில மரமாக பனை மரம் உள்ளது. நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்கும். மண் அரிப்பை தடுக்கும். மழை காலங்களின் ஆறு, குளம், கண்மாய் கரைகளில் உடைப்பெடுக்காமல் பாதுகாக்கும்.எனவே பனை மரங்கள் வளர்ப்பை ஊக்கப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது. மக்கள் இயக்கமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை துவக்கி உள்ளது . வேளாண் , தோட்டக்கலை துறை மட்டுமின்றி நகராட்சிகள், பேரூராட்சிகள் , ஊராட்சி நிர்வாகங்கள் இதில் ஈடுபட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு நகராட்சி, பேரூராட்சிகளில் பனை விதைகள் நடவு செய்ய தகுதியான இடங்களை தேர்வு செய்து தெரிவிக்குமாறு கோரியுள்ளனர். ஊராட்சிகளில் குறைந்தது தலா 200 விதைகள் நடவு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்களும், இயற்கை ஆர்வலர்களும் இந்த பனை விதை நடவில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உத்தமபாளையம்
உத்தமபாளையம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன வளாகத்தில் தமிழக அரசு உத்தரவின்படி பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. வளாகத்தில் உள்ள காலி இடங்களில் பனை விதைகளை கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி தலைமையில் நடவு செய்தனர். கல்லூரி துணை முதல்வர், பேராசிரியர்கள் பங்கேற்று பனை விதைகளை நடவு செய்தனர்.
28-Sep-2024