உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குழந்தைகள் மீது கவனம் கொள்ளும் பெற்றோர் ஆளுமையான குடிமகன்களை உருவாக்குவர்

குழந்தைகள் மீது கவனம் கொள்ளும் பெற்றோர் ஆளுமையான குடிமகன்களை உருவாக்குவர்

தேனி : குழந்தை மீது கவனம் கொள்ளும் பெற்றோர்தான் ஆளுமையான குடிமகன்களை உருவாக்குவார்கள் என எழுத்தாளர் பர்வீன் சுல்தானா பேசினார்.தேனி லைப் இன்னொவேஷன் பப்ளிக் பள்ளி ஆண்டு விழா தாளாளர் நாராயண பிரபு தலைமையில் நடந்தது. விழாவில் எழுத்தாளர் பேராசிரியை பர்வீன் சுல்தானா பேசியதாவது: குழந்தைகள் காதில் எதை கேட்கிறதோ அது ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகள் சொல்பேச்சு கேட்டு வளர்வது இல்லை. பெற்றோரை பார்த்து வளர்க்கின்றனர். குழந்தையை அலைபேசி பார்க்க கூடாது என கூறி விட்டு அவர்கள் முன்னிலையில் பெற்றோர் அலைபேசி பார்த்து கொண்டிருக்க கூடாது. நீங்கள் எதை சொல்கிறீர்களே அதை உங்கள் குழந்தைகளுக்கு முன்பாவது செய்யாமல் உதாரணமாக இருங்கள். சிறந்த பெற்றோரைத்தான் குழந்தைகள் ஆளுமையான மனிதர்களாக கருதுகிறார்கள். குழந்தைகளிடம் கூறும் அறிவுரை முக்கியமல்ல. நாம் வெளிப்படுவதை அவர்கள் பார்ப்பது தான் ஆளுமை. குழந்தைகளை மிக கவனமாக வடிவமைக்க வேண்டும். பெற்றோராக இருப்பது மிகப்பெரிய பொறுப்பு. பெற்றோர் குழந்தைகளிடம் காட்டும் அன்பு, கண்காணிப்பும், கண்டிப்பு மிக முக்கியம். பெற்றோராக இருப்பது என்பது பணி. பெற்றோராகிய நீங்கள் இறக்கும் வரை அந்த பணி தொடரும். குழந்தைகள் மீது கவனம் கொண்டிக்கும் பெற்றோர்கள் தான் ஆளுமையான குடிமகன்களை தருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை