உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலர் மோதி எரிந்த பஸ் உயிர் தப்பிய பயணிகள்

டூவீலர் மோதி எரிந்த பஸ் உயிர் தப்பிய பயணிகள்

தேனி:தேனி அருகே வீரபாண்டி பைபாஸ் ரோட்டில் கம்பம் நோக்கி சென்ற தனியார் பஸ் மீது டூவீலர் மோதிய விபத்தில் டூவீலர், பஸ்சின் முன்பகுதியில் தீ பற்றி எரிந்ததால், பயணிகள் அலறி அடித்து இறங்கினர்.மதுரையில் இருந்து தேனி வந்த தனியார் பஸ் நேற்று காலை 52 பயணிகளுடன் கம்பம் நோக்கி சென்றது. தேனி அருகே உள்ள வீரபாண்டி பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே டூவீலரில் வந்த தேவாரம் எர்ணம்பட்டியை சேர்ந்த மைனரூதீன் 21, எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதாமல் தப்பிக்க டூவீலரை வலதுபுறமாக திருப்பினார். இதில் தனியார் பஸ்சில் டூவீலர் மோதி, துாக்கிவீசப்பட்டார். சில விநாடிகளில் பஸ்சின் முன்பகுதியிலும், டூவீலரிலும் தீ பற்றி எரிந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்து கொண்டு இறங்கி ஓடினர். அதிஷ்டவசமாக பயணிகள் யாரும் காயமடையவில்லை. மைனரூதீன் காயமடைந்து தேனி அரசுமருத்துவக் கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டார். டூவீலர் முழுவதும் எரிந்து சேதமான நிலையில், பஸ்சின்வலது புற முன்பகுதி மட்டும் எரிந்து சேதமடைந்தது. போடி தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ