உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பண்ணைப்புரம் பஸ் நிறுத்தத்தில் விளக்கு பழுதாகி பயணிகள் அவதி

பண்ணைப்புரம் பஸ் நிறுத்தத்தில் விளக்கு பழுதாகி பயணிகள் அவதி

உத்தமபாளையம்: பண்ணைப்புரம் பஸ் நிறுத்தத்தில் ஹைமாஸ் விளக்கு எரியாததால் பயணிகள் இருளில் தவிக்கின்றனர். பண்ணைப்புரம் பேரூராட்சியில் உத்தமபாளையம் - தேவாரம் நெடுஞ்சாலையில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து கரியணம்பட்டி, பல்லவராயன்பட்டி, சிந்தலச்சேரி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து பல ஊர்களுக்கு பயணிக்கின்றனர். இந்த பஸ் நிறுத்தத்தில் இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டது. ஹைமாஸ் விளக்கு மிக பயன்பாடாக இருந்தது. கடந்த 3 மாதங்களாக இந்த விளக்கு பழுதாகி, பஸ் நிறுத்த பகுதி இருளில் மூழ்கியுள்ளது. இதனால் இரவில் வரும் பயணிகள் அவதிப்படுகின்றனர் . பா.ஜ. முன்னாள் ஒன்றிய தலைவர் சுருளி கூறுகையில், ஹைமாஸ் விளக்கு பழுது நீக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர பேரூராட்சியில் கூறினால், விரைவில் சரி செய்வோம் என்கின்றனர். ஆனால் இது வரை சரி செய்யவில்லை என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை