உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பராமரிப்பு இல்லாத நிழற்குடையால் பயணிகள் அவதி

பராமரிப்பு இல்லாத நிழற்குடையால் பயணிகள் அவதி

தேனி கிராமங்களை அதிகம் கொண்ட மாவட்டமாகும். கிராமங்களில் இருந்து மக்கள் வெளியூர் செல்ல பஸ் பயணத்திற்காக நிறுத்தங்களில் வெயில், மழையில் பல மணிநேரம் காத்திருந்து பயணிக்க வேண்டியுள்ளது. மக்கள் சிரமங்களை போக்க அரசு சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை தரமில்லாத பணிகளாலும், முறையான பராமரிப்பு இன்றி ஒருசில ஆண்டுகளிலேேய கூரை சிமென்ட் பூச்சுக்கள் விழுகிறது. இதனால் பயணிகள் சிரமப்படுகின்றனர். நிழற்குடைகளை சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !