மேலும் செய்திகள்
காளியம்மன் கோயில் திருவிழா
01-Jun-2025
தேவதானப்பட்டி: மேல்மங்கலம் பட்டாளம்மன் முத்தையா கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.பெரியகுளம் அருகே மேல்மங்கலம் முத்தையா கோயில் ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி பொங்கல் திருவிழா கோலாகலமாக நடக்கும். 44 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக இரு தினங்களாக யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மங்கள இசையுடன், விக்னேஷ்வர பூஜையை தொடர்ந்து, பட்டாளம்மன், ஆவுடையம்மன், முத்தையா கோயில் மற்றும் பரிவார தெய்வங்கள், கோபுரங்களுக்கு அர்ச்சகர்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். செயல் அலுவலர் வேலுச்சாமி, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.--
01-Jun-2025