உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அடிப்படை வசதிகள் இல்லாத பென்னிகுவிக் மணிமண்டபம் - சிரமத்தில் சுற்றுலா பயணிகள்

அடிப்படை வசதிகள் இல்லாத பென்னிகுவிக் மணிமண்டபம் - சிரமத்தில் சுற்றுலா பயணிகள்

கூடலுார்: லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் அடிப்படை வசதிகள் இன்றி சுற்றுலாப் பயணிகள் சிரமப்படுவது தொடர்கதையாக உள்ளது. முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுவிக்கிற்கு லோயர்கேம்பில் மணி மண்டபம் கட்டி 2013ல் பயன்பாட்டிற்கு வந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்திற்கு அதிகளவில் வந்து செல்கின்றனர். அணையை கட்டிய பென்னிகுவிக்கின் வாழ்க்கை வரலாறு காட்சிப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை இல்லை. அணை கட்டுமான பணியின் போது பென்னிகுவிக் பயன்படுத்திய சாய் நாற்காலி மட்டும் கொண்டு வரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. சமீபத்தில் அணை கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு படகு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டு உள்ளது. இதனைப் பார்க்க சுற்றுலா பயணிகள் அதிகம் வந்த போதிலும் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது சுற்றுலா பயணிகளை முகம் சுளிக்க வைத்துள்ளது. ஏற்கனவே உள்ள கழிப்பறை அடிக்கடி பழுது ஏற்பட்டு பயன்படுத்த முடியாமல் பூட்டிய நிலையில் உள்ளது. மணிமண்டபத்தைச் சுற்றியுள்ள தளம் தற்போது சேதம் அடையத் துவங்கியுள்ளது. சமீபத்தில் விவசாய சங்கம் சார்பில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. ஆனால் அவை முறையாக பயன்படுத்தாமல் காட்சிப் பொருளாக உள்ளது. ஆங்காங்கே பயணிகள் அமர்ந்து செல்ல இருக்கை வசதிகள் செய்து தரப்படவில்லை. தென் தமிழகத்தின் கடவுளாக கருதப்படும் பென்னிகுவிக்கின் மணி மண்டபத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் நிலையில் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர நீர்ப்பாசனத் துறையினர் முன் வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை