ஓய்வூதியர் சங்க கூட்டம்
தேனி: வீரபாண்டி திருமண மண்டபத்தில் ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான ஓய்வூதியர் உரிமை தின கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில மண்டல செயலாளர் இமானுவேல், மகளிரணி அமைப்பாளர் ரெங்கநாயகி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் காளிமுத்து, பொருளாளர் ஸ்டீபன், நிர்வாகிகள் பவானந்தன், திருமேனி பாலகுரு, திருஞானம், அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் குபேந்திரசெல்வம், மாவட்ட கருவூல அலுவலர் அருணாச்சலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் ஓய்வூதியர்கள் அனைவரும் களஞ்சியம் செயலியை பயன்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும். காப்பீட்டு திட்ட குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.