உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குப்பையில் தொடர்ந்து தீ வைப்பதால் மக்கள் பாதிப்பு

குப்பையில் தொடர்ந்து தீ வைப்பதால் மக்கள் பாதிப்பு

போடி: போடி மீனாட்சிபுரம் பேரூராட்சியில் உள்ள நுண் உரக்கூடத்தை முழுமையாக பயன் படுத்தாமல் சேகரமாகும் குப்பையில் தீ வைப்பதால் வெளியேறும் புகையால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குப்பையை மறு சுழற்சி செய்திட திடக்கழிவு மேலாண்மை திட்டம் நடை முறைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் மண்புழு உரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இங்கு உள்ள உரக்கூடம் பெரிய அளவில் இல்லாததால் முழுமையாக செயல்படாமல் உள்ளது. இதனால் பேரூராட்சியில் சேகரமாகும் குப்பையை துப்புரவுப் பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகம், துணை சுகாதார நிலையம் அருகே மொத்தமாக கொட்டி தீ வைத்து வருகின்றனர். புகையால் பாதிப்பு ஏற்படுகிறது. பொதுமக்கள் துணை சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் சுவாச பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். குப்பையில் தீ வைப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி