உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மலைப்பாதையில் அதிவேக ஜீப்களால் மக்கள் அச்சம்

மலைப்பாதையில் அதிவேக ஜீப்களால் மக்கள் அச்சம்

போடி: போடிமெட்டு மலைப் பாதையில் கூலித் தொழிலாளர்களை அதிக அளவில் ஏற்றிக் கொண்டு வேகமாக ஓட்டி வரும் கேரளா ஜீப், வேன்களால் மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.போடி அதனை சுற்றி உள்ள கிராமப் பகுதியில் இருந்து போடிமெட்டு, கேரளா பகுதியில் உள்ள ஏலத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு கூலித் தொழிலாளர்களை தினம் தோறும் காலை 7:00 மணிக்கு ஏற்றி கொண்டு 30 க்கும் மேற்பட்ட ஜீப், வேன்களில் கேரளா செல்கின்றனர். அங்கு மதியம் 3:00 மணி அளவில் ஒரே நேரத்தில் தோட்ட வேலைகள் முடிகிறது. அங்கு இருந்து கூலித் தொழிலாளர்களை ஜீப், வேன்களில் ஏற்றிக் கொண்டு போடி, தர்மத்துப்பட்டி, சில்லமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதியில் இறக்கி விட போடிமெட்டு மலைப் பாதையில் போட்டி போட்டு வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வருகின்றனர். சிலர் பெர்மிட் இன்றி, மதுபோதையில் வாகனத்தை ஒட்டி வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுவதோடு, உயிர் பலியாகிறது.போடியில் பள்ளி விடும் நேரங்களில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டி வருவதால் மாணவர்கள், பொது மக்களும் அச்சம் அடைகின்றனர். பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன் அதிவேக வாகன ஓட்டிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை