உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆக்கிரமிப்பு அகற்ற அலுவலகம் முன் திரண்ட பொதுமக்கள்

ஆக்கிரமிப்பு அகற்ற அலுவலகம் முன் திரண்ட பொதுமக்கள்

தேனி : ஆக்கிரமிப்பாளரை அகற்ற வலியுறுத்தி அல்லிநகரம் பட்டியலின மக்கள் பங்களாமேடு நெடுஞ்சாலை அலுவலக வளாகத்தில் திரண்டனர். பின் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.அல்லிநகரம் தனியார் மருத்துவமனை எதிரே பட்டியலின சமூகத்திற்கு பாத்தியப்பட்ட கோயில் உள்ளது. இக்கோயில் வாசலில் ராமர் என்பவர் கடை வைத்து ஆக்கிரமித்துள்ளதாக போலீசில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்தனர்.போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. நீண்ட போராட்டத்திற்கு பின், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி தாலுகா குழு செயலாளர் தர்மர், மாவட்டக்குழு உறுப்பினர் நாகராஜ், முன்னாள் மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ் தலைமையில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தேனி மதுரை ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன் ஆக்கிரமிப்பு அகற்றும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட வந்தனர். உதவி கோட்டப் பொறியாளர் ராமமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினார். அதில்,'நகராட்சி ஆக்கிரமிப்பு எடுக்க கமிஷனருக்கு பரிந்துரை அனுப்பி உள்ளேன். ஆக்கிரமிப்பை எடுத்து கொடுத்தால் அப்பகுதியை உங்களுக்கு ஒப்படைத்து விடுகிறோம்' என்றார். இதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை