உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி தாலுகா அலுவலகத்தில் குடிநீர் கழிப்பறை வசதி இன்றி மக்கள் அவதி

தேனி தாலுகா அலுவலகத்தில் குடிநீர் கழிப்பறை வசதி இன்றி மக்கள் அவதி

தேனி; தேனி தாலுகா அலுவலகத்தில் குடிநீர், கழிப்பறை வசதி இல்லாததால் பொது மக்கள் அவதிக்கு உள்ளாவது தொடர்கிறது.இந்த அலுவலகத்திற்கு பட்டா மாறுதல், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், ஆதார் சேவை உள்ளிட்ட அரசு சேவைகளுக்காக தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். அடிப்படை வசதி இருந்தும், அதனை பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.பலர் மீறு சமுத்திர கண்மாய் கரை, கட்டண கழிப்பறையை பயன்படுத்தும் நிலை உள்ளது.அதே போன்று அலுவலகத்தின் முதல் தளத்தில் தாசில்தார் அறைஅருகே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பல மாதங்களாக பயன்பாடு இன்றி உள்ளது. அலுவலகத்திற்கு வருகை தரும் பொது மக்கள் குடிநீரை வெளியில் விலைக்கு வாங்கிஅருந்தும் நிலை உள்ளது. குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தையும், வளாகத்தில் உள்ள கழிப்பறைகளையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி