உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேசிய கூடைப்பந்து போட்டி பெரியகுளம் மாணவி சாதனை

தேசிய கூடைப்பந்து போட்டி பெரியகுளம் மாணவி சாதனை

பெரியகுளம்: பள்ளி மாணவிகளுக்கான தேசிய கூடைப்பந்து போட்டியில் சாம்பியன்பட்டம் பெற்ற தமிழ்நாடு அணியில் விளையாடிய பெரியகுளம் மாணவி சுனேனா சாதனை படைத்தார். பெரியகுளம் வடகரை வடக்கு பூந்தோட்டத்தைச் சேர்ந்த விஸ்வநாதன், பிரியா தம்பதிகள் மகள் சுனேனா 15.பத்தாம் வகுப்பு மாணவி. பெரியகுளம் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப்பில் விளையாடி தொடர் வெற்றி பெற்றார். பின் திருவண்ணாமலை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 9ம் வகுப்பு மாணவியாக தேர்வானார். 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான மாநில அணியில் சுனேனா தேர்வாகி, தமிழ்நாடு அணிக்கு விளையாடினார். தேசிய அளவிலான விளையாட்டு போட்டி சென்னையில் ஜன.16ல் துவங்கியது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உட்பட 33 மாநிலங்களிலிருந்து 462 பள்ளி மாணவிகள் விளையாடினர். இறுதி போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜன.19ல் நடந்தது. இறுதிப்போட்டியில் தமிழ்நாடு, மஹாராஷ்டிரா அணிகள் மோதியது. இதில் தமிழ்நாடு அணி 53:47 புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு அணிக்கு விளையாடிய சுனேனாவிற்கு தங்கப்பதக்கம், கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவி சுனேனா கூறுகையில், 'இந்தியாவிற்காக விளையாடி வெற்றி பெற வேண்டும் என்பதை இலக்காக கொண்டுள்ளேன்,' என்றார். இவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை