உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரூ.1.30 கோடியில் இரு கால்நடை மருந்தகங்கள் கட்ட அனுமதி

ரூ.1.30 கோடியில் இரு கால்நடை மருந்தகங்கள் கட்ட அனுமதி

தேனி : பூதிப்புரம், டொம்புச்சேரியில் தலா ரூ.65 லட்சம் செலவில் கால்நடை மருந்தகங்கள் கட்ட பணிகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனரகம் நிதி ஒதுக்கி செய்து, ஒப்புதல் அளித்துள்ளது.பூதிப்புரம், டொம்புச்சேரி பகுதிகளில் கால்நடைகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. இங்கு கால்நடை மருந்தகங்களை உருவாக்க வேண்டும் என விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் அதிகளவில் மாவட்ட நிர்வாகத்திற்கும், கால்நடை பராமரிப்புத்துறைக்கும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இயக்குனரகம், இரண்டு கால்நடை மருந்தகங்கள் கட்டுவதற்கு அனுமதி அளித்து தலா ரூ.65 லட்சம் என ரூ.1.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில் நிதி கிடைத்ததும் பொதுப்பணித்துறை சார்பில் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை