உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கலெக்டர் அலுவலகத்தில் மனு

கலெக்டர் அலுவலகத்தில் மனு

தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஹிந்து முன்னணி மாவட்ட நிர்வாகிகள் உமையராஜன், முருகன் தலைமையில் பொதுமக்கள் மனு அளித்தனர். மனுவில், 'பெரியகுளம் தாலுகா தாமரைகுளத்தில் வெங்கடாஜலபதி கரடு பகுதி உள்ளது. அங்கு அறநிலைத்துறைக்கு சொந்தமான வெங்கடாஜலபதிகோயில் உள்ளது. அந்த பகுதியில் மற்றொரு சமயத்தினர் அசைவம் சமைத்து உண்ண முயன்றனர். பொதுமக்கள் தடுத்தால் அதனை நிறுத்தனர். அதிகாரிகளுக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். மத உணர்வுகளை துாண்டி பொது அமைதியை சீர்குலைப்போர் மீது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதியில் அமைத்துள்ள தகர செட்டுகளை அகற்றிட கோரினர்.பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜபாண்டியன், ஹிந்து முன்னணி நகரத்தலைவர் மணிகண்டன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை