உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வைகை அணையில் இரு மகள்களை வீசி கொன்று தந்தையும் குதித்து தற்கொலை உடல்களை மீட்டு போலீசார் விசாரணை

வைகை அணையில் இரு மகள்களை வீசி கொன்று தந்தையும் குதித்து தற்கொலை உடல்களை மீட்டு போலீசார் விசாரணை

பெரியகுளம்: தேனி மாவட்டம் வைகை அணை நீர்த்தேக்கப்பகுதியில் மன அழுத்தத்திற்கு ஆளான தந்தை இரு மகள்களை துாக்கி வீசி கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல்களை மீட்ட போலீசார் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மன்னமனுார் கிருஷ்ணமூர்த்தி 37. பெரியகுளம் மேல்மங்கலம் பிள்ளைமார் தெரு பிரியங்கா 30. இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு மகள்கள் தாரா ஸ்ரீ 7, தமிழிசை 5, உள்ளனர். கிருஷ்ணமூர்த்தி மண் அள்ளும் கனரக வாகன டிரைவராக பணிபுரிந்து வந்தார். சில ஆண்டுகளாக மன அழுத்தத்திற்கு ஆளான கிருஷ்ணமூர்த்தி சிகிச்சையும் பெற்று வந்தார். இதனால் கணவன், மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தனர். இருதரப்பு பெற்றோர்கள் சமாதானப்படுத்தினர். பெரியகுளம் வடகரை வடக்கு பூந்தோட்டத்தெருவில் 5 மாதங்களாக குழந்தைகளுடன் இத்தம்பதி குடும்பம் நடத்தினர். அக்., 24 மதியம் கிருஷ்ணமூர்த்தி, மகள்களுடன் கடைக்கு சென்று வருவதாக வீட்டிலில் இருந்து சென்றார். நீண்ட நேரமாகியும் கணவர், மகள்கள் வீடு திரும்பவில்லை. மனைவி பிரியங்கா அக்கம் பக்கம், உறவினர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் கணவர், இரு மகள்களை காணவில்லை என பெரியகுளம் வடகரை போலீசில் அக்., 24ல் அவர் புகார் அளித்தார். எஸ்.ஐ., விக்னேஷ் மற்றும் போலீசார் அவர்களை தேடினர்.

மூவர் உடல்கள் மீட்பு

இந்நிலையில் நேற்று அக்., 26 காலை 10:00 மணிக்கு வைகை அணை வடக்கு நீர்த்தேக்கப்பகுதியில் சிறுமி ஒருவரது உடல் மிதந்தது. அந்த வழியாக சென்றவர்கள் வைகை அணை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சிறிது நேரத்தில் மற்றொரு சிறுமி உடல் மிதந்தது. போலீசார் காணாமல் போனவர் விபரங்களை விசாரித்து உடல்கள் தாரா ஸ்ரீ, தமிழிசை என உறுதி செய்தனர். இதனையடுத்து தீயணைப்புத்துறை வீரர்கள் தேடிய போது கிருஷ்ணமூர்த்தி உடலும் மீட்கப்பட்டது. அணைக்கு மகள்களை சுற்றிப்பார்க்க அழைத்து சென்று நீர்த்தேக்க பகுதியில் ஒவ்வொருவராக வீசி கொலை செய்து பிறகு கிருஷ்ணமூர்த்தியும் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை