உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

கடன் பிரச்னையில் தகராறு: ஐவர் வழக்குதேனி: அரண்மனைப்புதுார் ஓடைத்தெரு ராஜேஷ்கண்ணன். இவர் அதேப்பகுதி சுகன்யாவுக்கு ரூ.30 ஆயிரம் கடன் கொடுத்தார். இப்பணத்தை தருமாறு ராஜேஷ்கண்ணனின் தாய் மாரியம்மாள் 64, பலமுறை கேட்டும் தராததால் இருதரப்பினருக்கும் பிரச்னை ஏற்பட்டது. 2024 ஜூலை 25ல் தாய், மகன் இருவரும் சுகன்யாவின் வீட்டிற்கு சென்று பணத்தை திருப்பிக்கேட்டனர். ஆத்திரம் அடைந்த சுகன்யா தகாத வார்த்தைகளால் திட்டினார். அதேபகுதி ஓடைத்தெரு முருகன், அவரது மனைவி மயில், முத்து, விஸ்வா ஆகியோர் கட்டையால் ராஜேஸ்கண்ணனை தாக்கி காயப்படுத்தினர். பின் அவர்கள் ஓட்டிச் சென்ற டூவீலரை தாக்கி சேதப்படுத்தினர். மாரியம்மாள் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் சுகன்யா, முருகன் அவரது மனைவி மயில், முத்து, விஸ்வா ஆகிய ஐவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.கொலை மிரட்டல் நால்வர் மீது வழக்குதேனி: கம்பம் கிராமச் சாவடி 2வது தெரு அங்கையர்கண்ணி 33. இவரது கணவர் வீரபாண்டி மகேஸ்வரன் 35. இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்று தனித்தனியாக வசிக்கின்றனர். ஆக., 21ல் மாலை அங்கையர்கண்ணியின் இளைய சகோதரி சத்யாவும், மற்றொரு மூத்த சகோதரி தனமும் வீட்டிற்கு அருகில் டூவீலரில் சென்றனர். அப்போது டூவீலரை மறித்து, மகேஸ்வரன், மற்றொரு நபருடன் இணைந்து சத்யாவை தாக்கி, கத்தியை எடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர். சத்யா புகாரில் கம்பம் தெற்கு போலீசார் மகேஸ்வரன், மற்றொரு நபர் உட்பட இருவர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். மகேஸ்வரன் புகாரில், அங்கையர்கண்ணியின் தந்தை சேக்கிழார், மகன் மாரிச்செல்வம் ஆகிய இருவர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.டிராக்டரில் பேட்டரி திருட்டுதேனி: குன்னுார் பள்ளித்தெரு ராஜேஸ்கண்ணன் 34. அரசு ஒப்பந்ததாரர். இவர் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை பகுதியில் அரசு ஒப்பந்தப் பணிகளை எடுத்து செய்து வருகிறார். இவர் கடந்த ஆக., 9ல் கண்டமனுார் ஊராட்சி அலுவலகம் அருகில் டிரான்ஸ்பார்மர் அருகில் தனக்கு சொந்தமான டிராக்டரை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை டிராக்டரில் இருந்த ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். கண்டமனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ