உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்.....

போலீஸ் செய்திகள்.....

தற்கொலைதேனி: பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரம் விஜயகுமார் 39. மனநல பிரச்னை இருந்ததால் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் வீட்டின் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது சகோதரர் பாலகுருசாமி புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.மிரட்டி கையெழுத்து வாங்கியதாக வழக்குதேனி: பெரியகுளம் தென்கரை அழகப்பன்சந்து பாண்டியம்மாள் 43. இவர் அதே பகுதியை சேர்ந்த வையங்கருப்பணன் என்பவரிடம் ரூ.50ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். அதற்கு வட்டியாக மாதந்தோறும் ரூ. 5ஆயிரம் செலுத்தி வந்தார். இந்நிலையில் இம் மாதத்திற்கான வட்டி வழங்காததால் வையங்கருப்பணன், இவரது மனைவி ராஜலட்சுமி, மகாத்மா காந்திநகர் ராம்பிரசாத், பரமேஸ்வரி, முத்துப்பேச்சி இணைந்து பாண்டியம்மாளை தாக்கி, ரூ.5லட்சம் கடன் வாங்கியதாக பத்திரத்தில் கையெழுத்து வாங்கினர். பாண்டியம்மாள் புகாரில் தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.விபத்தில் ஒருவர் பலிதேனி: திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலக்குண்டு ரைஸ்மில்தெரு கார்த்திகேயன் 32. பெரியகுளத்தில் உள்ள தனியார் பஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் பணி முடித்து டூவீலரில் வீடு திரும்பினார். காட்ரோடு அருகே சென்ற போது கொடைக்கானல் செண்பகனுார் ஜோசப் 65 என்பவர் ஓட்டி சென்ற லாரி டூவீலருக்கு முன் சென்றது. லாரி திடீரென நின்றதால் கார்தியேகன் லாரியில் மோதினார். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். உடலை வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கார்த்திகேயன் மனைவி காவியபவித்ரா புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை