உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்..

போலீஸ் செய்திகள்..

மாமியாரை தாக்கியமருமகன் மீது வழக்குதேனி: மாரியம்மன் கோவிலபட்டி தெற்கு தெரு வசந்தா. இவரது மகளை அதே பகுதியை சேர்ந்த கதிரேசன் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையை வசந்தா தடுத்தார். ஆத்திரமடைந்த கதிரேசன் வசந்தாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். வசந்தா புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.பயணியிடம்செயின் பறிப்புதேனி: ஓடைப்பட்டி சாவடிதெரு மனோமணி 65. இவர் உறவினர் வீட்டு விஷேசத்தில் பங்கேற்க பூதிப்புரம்வந்தார். அங்கிருந்து தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் வந்தார். பஸ் ஸ்டாண்டில் பஸ்சில் ஏற முயன்ற போது அவர் அணிந்திருந்த ரூ.75ஆயிரம் மதிப்புள்ள 2.5 பவுன் செயின் திருடு போனது. மனோமணி புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.தொழிலாளிதற்கொலைதேனி: பாரஸ்ட்ரோடு 6வது தெரு மணிகண்டன் 33, இவர் தேனி உள்ள ஜவுளி கடையில் பணிபுரிந்தார். உடல்நிலை சரியில்லாததால் அவதிபட்ட வந்தார். இந்நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மனைவி ஜெயஸ்ரீ புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை