உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

பந்தல் அமைப்பாளர் உயிரிழப்புதேனி: பாரஸ்ட் ரோடு முதல் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் 45. இவர் தனது தந்தை சின்னராஜூடன் 73, இணைந்து பந்தல் அமைக்கும் தொழில் செய்து வந்தார். வேல்முருகனுக்கும், ஜெயலட்சுமி என்பவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்து, கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்தனர். புத்தாண்டு அன்று பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே மது போதையில் வேல்முருகன் விழுந்து கிடப்பதாக தந்தைக்கு தகவல் கிடைத்தது. மகன் குறித்து 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் அளித்தார். பரிசோதனை செய்த ஊழியர்கள், வேல்முருகன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.ஆட்டோ டிரைவர் தற்கொலைதேனி: தேனி பவர் ஹவுஸ் தெரு முருகேசன் 55. ஆட்டோ டிரைவர் .இவரது மனைவி முத்துலட்சுமி 42., ஜவுளிக்கடையில் பணிபுரிகிறார். கடன், குடும்ப பிரச்னையால் விரக்தி அடைந்து வீட்டிற்கு செல்லாமல், மூத்த சகோதரி தனலட்சுமி வீட்டில் இருந்து வந்தார். புத்தாண்டு அன்று வீட்டிற்கு வந்தவர் துாக்கிட்டு இறந்தார். தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை